தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


UPDATED : அக் 12, 2026 09:19 PM

ADDED : அக் 12, 2026 08:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 09:19 PM ADDED : அக் 12, 2026 08:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பஸ்ஸை வழிமறித்து ரகளை: ரவுடி கைது

காசிமேடு: தீவுத்திடலில் இருந்து தண்டையார்பேட்டை நோக்கி சென்ற, தடம் எண் ‘56டிʼ பேருந்தை, காசிமேடு அருகே கடந்த 10ல் வழிமறித்த அன்பரசு, 25, என்ற ரவுடி, கத்தியை காட்டி பயணியரிடம் ரகளையில் ஈடுபட்டார். போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் நேற்று அடைத்தனர்.

குளியலறையில் கேமரா: இருவர் கைது

அண்ணா நகர்: அண்ணா நகர் ‘ஏ’ பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 28 வயது பெண் தங்கி, குழந்தைகளை பராமரித்து வருகிறார். நேற்று காலை குளிக்க சென்றபோது, சமையலறையில் இருக்க வேண்டிய ‘டப்பா’ அங்கிருந்தது. அதில் மொபைல் போன் வைத்து ‘வீடியோ’ பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

அண்ணா நகர் போலீசார் விசாரித்து, அதே வீட்டில் தங்கி பணிபுரியும் பீஹாரைச் சேர்ந்த சுங்சுகுமார், 21, அசோக்குமார், 33, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

துாங்கிய வடமாநில நபரிடம் திருட்டு

வியாசர்பாடி: வியாசர்பாடி, பாலகிருஷ்ணன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார், 49. இவரது வீட்டில் கட்டுமான பணி செய்யும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அப்துல்காதிர், 18, என்பவரை மிரட்டி மொபைல் போன், 5,000 ரூபாயை மர்ம நபர் பறித்து சென்றார். வியாசர்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருட்டு வழக்கில் சிறுவன் கைது

வியாசர்பாடி: வியாசர்பாடியில் உள்ள ஒரு பாலகத்தின் இரும்பு ஷட்டரை உடைத்து, கடந்த 7ல் பணம் திருடப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை, போலீசார் நேற்று பிடித்து, சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

ரூ.ஒரு லட்சம் கஞ்சா பறிமுதல்

கொரட்டூர்: கொரட்டூர் பேருந்து நிலையத்தில், கஞ்சா விற்பதற்காக நின்றிருந்த திருவாரூரைச் சேர்ந்த யோகேஷ், 19, என்பவரை, நேற்று கைது செய்த அம்பத்துார் மதுவிலக்கு போலீசார், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

ஜெ.ஜெ.நகர்: முகப்பேர் கிழக்கு, மறைமலை அடிகளார் தெரு சந்திப்பில் உள்ள ராஜராஜேஷ்வரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு உண்டியலை உடைத்து, மர்ம நபர்கள் காணிக்கையை திருடி தப்பினர்.

ஆபாச சைகை காண்பித்தவர் கைது

புதுவண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 46 வயது பெண்ணிடம், பக்கத்து வீட்டில் வசிக்கும் கலைமணி, 40, என்பவர் ஆபாச சைகை காண்பித்து பாலியல் தொல்லை தந்தார். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து, கலைமணியை நேற்று கைது செய்தனர்.

மளிகை கடையில் ரூ.29,000 திருட்டு

திருவொற்றியூர்: திருவொற்றியூர், பாலகிருஷ்மாக நகரில் ரகுநாதன் என்பவரின் மளிகை கடை பூட்டை, நேற்று முன்தினம் இரவு உடைத்து, 29 ஆயிரம் ரூபாயை, நான்கு பேர் திருடி தப்பினர். போலீசில் சிக்காமல் இருக்க அங்கிருந்த தனியார் ஏ.டி.எம்., வங்கி மற்றும் மொபைல் போன் கடையின் ‘சி.சி.டி.வி.’ கேமராக்களை உடைத்துள்ளனர். சாத்தாங்காடு போலீசார் விசாரித்து விசாரிக்கின்றனர்.

தலைமறைவு ரவுடி கைது

புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் ‛டைகர்’ இளம்பரிதி, 45. கடந்த 2024ல் பதியப்பட்ட ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பினார். புளியந்தோப்பு போலீசார், அவரது வீட்டில் நேற்று மதியம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மனைவியை தாக்கிய கணவர் கைது

எஸ்பிளனேடு: மண்ணடி, ஜோன்ஸ் தெருவைச் சேர்ந்தவர் பெமினா, 31. இவரது கணவர் முகமது தாரிக், 39; துணிக்கடை ஊழியர். கடந்த 10ல், மது போதையில் வீட்டில் இருந்த மனைவியையும், தடுக்கவந்த பெற்றோரையும் தாக்கினார். முகமது தாரிக்கை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

முதியவரை தாக்கி நால்வர் கைது

கோயம்பேடு: கோயம்பேடு 100 அடி சாலை அருகே, ஒரு முதியவரை, நேற்று முன்தினம் இரவு நான்கு பேர் தாக்கி கொண்டிருந்தனர். அவ்வழியே சென்ற ஓட்டுநர் கார்த்திக், 31, காரை நிறுத்தி தாக்குதலை தடுத்தார்.

ஆத்திரமடைந்த நால்வரும், அவரை தாக்கி பணம் மற்றும் மொபைல் போன் பறிக்க முயன்றனர். அங்கிருந்தோர் ஓடிவரவே நான்கு பேரும் தப்பினர். கோயம்பேடு போலீசார் விசாரித்து பிரபாகரன், 21, சஞ்சய், 23, உட்பட நான்கு பேரை, நேற்று கைது செய்தனர்.

ரியல் எஸ்டேட் வர்த்தகர் கொலையில் இருவர் கைது

ஆவடி: ஆவடி அடுத்த செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித், 41; ரியல் எஸ்டேட் வர்த்தகர்.

கடந்த 4ல், தன் நண்பர்களான ஜான், தீனதயாளன் உள்ளிட்ட நால்வருடன் திருமுல்லைவாயில் பகுதியில் மது அருந்தினார். மது பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறில், கல்லால் ஜான், 40, தாக்கியதில் கடந்த 9ல், மருத்துவமனையில் ரஞ்சித் இறந்தார். திருமுல்லைவாயில் போலீசார், ஜான், தீனதயாளன், 47, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

‘பங்க்’கில் வாடிக்கையாளர் அடாவடி

போரூர்: அய்யப்பன்தாங்கல், மதுரம் நகரைச் சேர்ந்த சந்தோஷ், 20, போரூர் சந்திப்பில் உள்ள ‘பங்க்’கில், தன் பைக்கிற்கு 300 ரூபாய் பெட்ரோல் நிரப்பினார்.

அதற்குண்டான பணத்தை ‘ஆன்லைன்’ வாயிலாக 276, 12, 9 மற்றும் 2 ரூபாய் சிறுது சிறுதாக அனுப்பினார். இதுகுறித்து ஊழியர் கேட்டபோது, சந்தோஷ் அவரை தாக்கினார். அங்கிருந்தோர் சந்தோஷை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்; போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us