UPDATED : அக் 13, 2026 08:41 PM
ADDED : அக் 13, 2026 07:56 PM
அ நிறம் | அளவு
மொபைல் போன் பறிப்பு 3 பேர் கைது
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் பிஸ்வஜித், 51; மொட்ரோ ரயில் வழித்தட பணியாளர். இவர், கோடம்பாக்கம், ஜக்கரியா காலனி பிரதான சாலை பகுதியில் தங்கியுள்ளார். கடந்த 9ம் தேதி அதிகாலை, ஆற்காடு சாலையில் மீனாட்சி கல்லுாரி அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், அவரது மொபைல் போனை பறித்து சென்றனர். இது குறித்து விசாரித்த கோடம்பாக்கம் போலீசார், ராயப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன், 26, வளசரவாக்கம் சின்ன போரூரைச் சேர்ந்த ரோஹித், 18 மற்றும் 16 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.
