UPDATED : அக் 14, 2026 03:54 AM
ADDED : அக் 14, 2026 01:49 AM
அ நிறம் | அளவு
விபத்தில் துணி வியாபாரி பலி
ஆதம்பாக்கம், சரஸ்வதி தெருவை சேர்ந்தவர் லட்சுமணன், 77; துணி வியாபாரி. இவர் கடந்த, 10ம் தேதி இரவு டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., சூப்பர் வாகனத்தில் ஆதம்பாக்கம், லட்சுமி நகர் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.
எதிர் திசையில் ஹோண்டா யுனிகான் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர், லட்சுமணனின் வாகனத்தின் மீது மோதினார். இதில், பலத்த காயமடைந்த லட்சுமணன் கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று இறந்தார்.
பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
