ADDED : அக் 16, 2026 07:55 PM
அ நிறம் | அளவு
வாலிபரை கத்தியால் வெட்டிய இருவர் கைது
ஓட்டேரி: அயனாவரம், ஏகாங்கிபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ், 22, ஓட்டேரி பொடி கடை அருகே, நேற்று அதிகாலை 2:00 மணிக்கு நடந்து சென்றார்.
மது போதையிலிருந்த நால்வர் அவரை கத்தியால் வெட்டினர். காயமடைந்த ஆகாஷ், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதே நான்கு பேர், ஓட்டேரி செங்கை சிவம் மேம்பாலம் அருகே வெங்கடேசன், 48, என்பவரை தாக்கி, 1,500 ரூபாயை பறித்துச் சென்றது. விசாரித்த பேசின்பாலம் போலீசார், வியாசர்பாடியைச் சேர்ந்த தினேஷ், 23, சதீஷ், 19, ஆகியோரை கைது செய்து, மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
