தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


ADDED : நவ 13, 2026 04:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2026 04:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடையில் புகுந்து போன் திருடியவருக்கு வலை

பெரம்பூர்: கொடுங்கையூரைச் சேர்ந்தவர் பிரியங்கா, 21. இவர், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள கண்ணாடி கடையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மாலை கடையில் வந்த மர்ம நபர், கண்ணாடியை பழுது பார்த்து தருமாறு கூறி, பிரியங்காவுடன் பேச்சு கொடுத்து, சிறிது நேரம் கழித்து கடையிலிருந்து வெளியேறினார். அப்போது, பிரியங்காவின் 20,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போன் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

7 ‘ஏசி’ மிஷின்களின் காப்பர் கம்பி திருட்டு

பெரம்பூர்: பெரம்பூர், பொன்னுசாமி நகர் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான் ஷெரீப், 40. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவரது வீடு உட்பட குடியிருப்பின், ஏழு வீடுகளில் இருந்து, ‘ஏசி’ மிஷின்களின் காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் அறுத்து எடுத்து சென்றுள்ளனர். திருடு போன காப்பர் கம்பிகளின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய். இது குறித்த புகாரை அடுத்து, திரு.வி.க., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

8 சவரன் நகைகள், வெள்ளி மாயம்

புளியந்தோப்பு: புளியந்தோப்பு கே.பி பார்க் பிளாக் – ஏ பகுதியைச் சேர்ந்தவர் ரேகா, 34; பள்ளி காலை உணவு திட்ட தற்காலிக ஊழியர். கடந்த 6ம் தேதி தீபாவளிக்காக புதுத்துணி வாங்க குடும்பத்துடன் கடைக்கு சென்றார். அப்போது, பக்கத்து வீட்டில் உள்ள ரேவதி என்பவரிடம் வீட்டை பார்த்துக் கொள்ளுமாறு கூறி சென்றுள்ளனர். இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்த 8 சவரன் நகைகள் மற்றும் குழந்தையின் வெள்ளி கொலுசு திருட்டு போனது. இது குறித்து பேசின்பாலம் காவல் நிலையத்தில் ரேகா புகார் அளித்துள்ளார். ரேவதியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us