ADDED : நவ 24, 2026 08:27 PM
வாலிபருக்கு கத்திக்குத்து: இருவர் கைது
கோயம்பேடு: கோயம்பேடு, திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பிரதீப், 22. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், 21, என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 22ம் தேதி மாலை, கோயம்பேடில் உள்ள டேனியல் தாமஸ் பள்ளியின் பின்புறம் உள்ள காலி இடத்தில், இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, நண்பர்களுடன் மோகன்ராஜ், பிரதீப்பை கத்தியால் தாக்கினார். தடுக்க முயன்ற அவரது சகோதரர் சஞ்சய், பிரியன் ஆகியோரையும் மோகன்ராஜ் கும்பல் தாக்கி தப்பியது. விசாரித்த கோயம்பேடு போலீசார் மோகன்ராஜ் மற்றும் தினேஷ், 25, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
குட்கா கடத்திய உ.பி., நபருக்கு ‘கம்பி’
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, பட்டாளம் சந்திப்பு அருகே பைக்கில் குட்கா கடத்திய உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அனித் பாண்டே, 41 என்பவரை, புளியந்தோப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். 1.5 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலை கிடைக்காததால், அடிக்கடி பெங்களூரு சென்று குட்கா பொருட்களை வாங்கி வந்து, வட சென்னையில் விற்பனை செய்து வந்தது, விசாரணையில் தெரிய வந்தது. விசாரணைக்கு பின், நேற்று நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
