கிரைம் கார்னர்: தனியாக வசித்த முதியவர் உயிரிழப்பு
கிரைம் கார்னர்: தனியாக வசித்த முதியவர் உயிரிழப்பு
ADDED : பிப் 11, 2026 06:23 AM
அ நிறம் | அளவு
சேலையூர்: மாடம்பாக்கம், ரமணா நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 67. அண்ணா பல்கலையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வந்துள்ளார். அவரது மனைவி, மகள், மகன் ஆகியோர், மடிப்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, பாலசுப்ரமணியன், தன் மகன் நவீனுக்கு போன் செய்து, உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார். மடிப்பாக்கத்தில் இருந்து அவரது உறவினர்கள் வந்து பார்த்தபோது, பாலசுப்ரமணியன் கீழே விழுந்து கிடந்தார்.
அருகில் உள்ள மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்ததில், அவர் இறந்தது தெரியவந்தது. போலீசார் உடலை, பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
