ADDED : ஜூன் 05, 2026 04:31 AM
அ நிறம் | அளவு
தம்பதியை தாக்கிய மூவருக்கு 'காப்பு'
வியாசர்பாடி: வியாசர்பாடி, மூர்த்திங்கர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் படையப்பா, 32. இவரது மனைவி துர்கா தேவி, 29, நேற்று முன்தினம் இரவு, இருவரும் சேர்ந்து, வியாசர்பாடி, பி - கல்யாணபுரம் சாலையில் நடந்து சென்றனர்.
அப்போது, அடையாளம் தெரியாத மூன்று வாலிபர்கள், தம்பதியை வழிமறித்து வீண் தகராறு செய்து தாக்கினர். காயமடைந்த இருவரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
எம்.கே.பி., நகர் போலீசார் விசாரித்து, அதே பகுதியைச் சேர்ந்த தயாள்ராஜ், 25, விக்னேஷ், 19, விமல்ராஜ் , 23, ஆகிய மூவரையும், நேற்று மாலை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக தம்பதியை தாக்கியதை ஒப்புக் கொண்டனர்.
