தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்L சென்னை

 கிரைம் கார்னர்L சென்னை

 கிரைம் கார்னர்L சென்னை


ADDED : ஜூன் 15, 2026 02:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 02:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியர் பலி

எண்ணுார்: எண்ணுாரைச் சேர்ந்தவர் மகிமைதாஸ், 58. ரயில்வேயில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, எண்ணுார் - கத்திவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவ்வழியே சென்ற ரயிலில் அடிபட்டு இறந்தார்.



மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

ஆவடி: ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜுகேஸ்வர் மஜ்ஹி, 23. ஆவடி அடுத்த பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார்.

செங்கல் சூளைக்கு சொந்தமான பொக்லைன் இயந்திரத்தை சுத்தம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது, மோட்டாரை இயக்கியபோது, எதிர்பாராதவிதமாக ஜுகேஸ்வர் மீது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.



மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வெட்டு

ஆவடி: ஆவடி, கோவில்பதாகையைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 48; மாற்றுத்திறனாளி. இவர், கணவரை பிரிந்து மகள் மற்றும் தாயுடன் வசித்து வருகிறார்.

எதிர் வீட்டில் வசிக்கும் ஆனந்தன், 23, என்பவர், நேற்று முன்தினம் இரவு மது போதையில், தனலட்சுமியின் வீட்டுக்குள் புகுந்து, அவரது தலையில் கத்தியால் வெட்டியுள்ளார்.

தனலட்சுமியை உறவினர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நான்கு தையல் போடப்பட்டது. ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், ஆனந்தனை தேடி வருகின்றனர்.



கஞ்சா விற்ற இருவர் கைது

புளியந்தோப்பு: புளியந்தோப்பு, தட்டாங்குளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதி விக்னேஷ், 20, என்பவரை, புளியந்தோப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், ஓட்டேரி, ப்ரிக்ளின் சாலையில், சிறுவர்களிடம் கஞ்சா விற்பனை செய்து வந்த, ஓட்டேரி, எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், 27, என்பவரை தலைமை செயலக காலனி போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.



சதுப்பு நிலத்தில் தீ

சோழிங்கநல்லுார்: சோழிங்கநல்லுார், இ.சி.ஆர்., சாலையை இணைக்கும் கருணாநிதி சாலை அருகே, சதுப்பு நிலப்பகுதியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

ஐந்து ஏக்கர் பரப்பளவிலான கோரைப் புற்களில் பற்றியெரிந்த தீயை, மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் அணைத்தனர். கரும்புகை சூழ்ந்ததால், அப்பகுதியினர் அவதிப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us