தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்: எலக்ட்ரானிக்ஸ் கடையில் திருடிய நபர் கைது

 கிரைம் கார்னர்: எலக்ட்ரானிக்ஸ் கடையில் திருடிய நபர் கைது

 கிரைம் கார்னர்: எலக்ட்ரானிக்ஸ் கடையில் திருடிய நபர் கைது


ADDED : ஜன 06, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிந்தாதிரிப்பேட்டை: சிந்தாதிரிபேட்டை, வாலர்ஸ் சாலையைச் சேர்ந்த முகமது ஒசாமா, 27, அதே பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

கடந்த, 3ம் தேதி, கடையின் வெளியே அடுக்கி வைத்திருந்த பிரிண்டர் மற்றும் ஸ்பீக்கர் திருடுபோனது. வழக்குப்பதிவு செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், திருட்டில் ஈடுபட்ட பெரியமேடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபால், 32, என்பவரை நேற்று கைது செய்து, பிரிண்டர் ஒன்றை பறிமுதல் செய்தனர்.

பெண் குளியல் வீடியோவிடுதி ஊழியர் கைது

வேப்பேரி: கேரள மாநிலத்தைச் சேர்ந்த, 23 வயது இளம்பெண், பெரியபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார்.

இவரும், இவரது தோழியும் சென்ட்ரல் என்.எச்.சாலையில் உள்ள தங்கும் விடுதியில் நேற்று முன்தினம் காலை அறை எடுத்து தங்கினர். அங்கு, கழிப்பறையில் செவிலியரின் தோழி குளிப்பதை மர்ம நபர் ஜன்னல் வழியாக மொபைல் போனில் 'வீடியோ' எடுத்துள்ளார்.

இதுகுறித்து வேப்பேரி போலீசில் புகார் அளிக்கவே, விசாரித்த போலீசார், விடுதியில் ஊழியராக பணிபுரிந்து வரும் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செய்பதி, 19, என்பது தெரிந்து அவரை கைது செய்தனர். அவரது மொபைல் போனில் தோழியின் வீடியோவை போலீசார் அழித்தனர். அந்த போனில் மேலும் பல பெண்களின் குளியல் வீடியோவையும் அழித்தனர்.

'போதை' மாத்திரை விற்ற தாய், மகன் கைது

ஐஸ்ஹவுஸ் போலீசார், கடந்த மாதம் 26ல் கிருஷ்ணாம்பேட்டை மயானபூமி அருகே, போதை மாத்திரை வைத்திருந்த, முனிர் பாஷா, 27, சையது பஷீர், 20, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின், ராயப்பேட்டையைச் சேர்ந்த மீனா, 41, சீனு, 25, ஆகிய இருவரை, போலீசார் தேடி வந்தனர். தாய், மகன் ஆகிய இவர்களை, போலீசார் நேற்று கைது செய்து 100 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

கோட்டூர்புரம், ஸ்ரீராமநகர் கலிக்குன்றம் பிரதான சாலையில், இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரோஹன் சர்கி, 28, என்பவரை, கோட்டூர்புரம் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சா, 314 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரோஹன் சர்கி, துரைப்பாக்கத்தில் சலுான் தொழில் செய்துவந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us