கிரைம் கார்னர்: ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய ரவுடி கைது
கிரைம் கார்னர்: ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய ரவுடி கைது
ADDED : ஏப் 25, 2026 08:29 PM
அ நிறம் | அளவு
வியாசர்பாடி: வியாசர்பாடி, சுந்தரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ், 27; ஆட்டோ ஓட்டுநர். வீட்டில் இருந்த ஆகாஷை, அதே பகுதியை சேர்ந்த சஞ்சய், அவரது மனைவி கனிமொழி ஆகியோர், முன்விரோதம் காரணமாக சரமாரியாக தாக்கி தப்பினர். இதில் ஆகாஷுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் ஆகாஷை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரித்த வியாசர்பாடி போலீசார், வியாசர்பாடி, கல்யாணபுரத்தைச் சேர்ந்த ரவுடி சஞ்சய், 30 என்பவரை, கைது செய்தனர். தலைமறைவான கனிமொழியை தேடி வருகின்றனர்.
