ADDED : ஏப் 26, 2026 10:15 PM
அ நிறம் | அளவு
ஆலந்துார்: தாம்பரம் அடுத்த படப்பையைச் சேர்ந்த சிவகுமார் மகன் பிரவேஷ்குமார், 19; கல்லுாரி மாணவர். ஆலந்துார் ஜி.எஸ்.டி., சாலையில் ஒரு கடையில் டீ ஆர்டர் கொடுத்து காத்திருந்தார். இவருக்கு பின்னால் வந்த பலருக்கு டீ கொடுத்த மாஸ்டர், பிரவேஷ்குமாருக்கு தராமல் இருந்துள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த டீ மாஸ்டர், கண்ணாடி டம்ளரால் தாக்கியதில் பிரவேஷ்குமாரின் தலை, கையில் காயம் ஏற்பட்டது; தனியார் மருத்துவமனையில் ஐந்து தையல் போடப்பட்டது.
இது தொடர்பான புகாரையடுத்து, பரங்கிமலை போலீசார் வழக்கு பதிந்து, டீ மாஸ்டரான சிவகங்கையைச் சேர்ந்த நாகராஜ், 56, என்பவரை கைது செய்தனர்.
