
ரவுடிகள் 10 பேர் கைது
சென்னை: பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டபோது, ஒரு கிலோ குட்கா வைத்திருந்த, சிந்தாதிரிப் பேட்டை வைத்தீஸ்வரன், 24, பெரம்பூர் ஹரிஹரன், 24, கொடுங்கையூர் சதீஷ், 25, ஆகிய மூவரை கைது செய்தனர்.
அதேபோல், புளியந்தோப்பு சரகத்தில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய விகாஸ், 21, மற்றும் வினித், 24, ஆகியோரை, ஓட்டேரி போலீசார் கைது செய்தனர்.
மேலும், புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில், மாமூல் கேட்டு தகராறு செய்த, 'குள்ள' பிரகாசம், 23, விஜய், 21, 'பூனை' தினேஷ், 20, கபாலி என்கிற விமல் ராஜ், 20, மற்றும் கிரண், 18, ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர்.
-
மொபைல் போன்
பறித்தவர் கைது--
ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த சக்திவேல், 21, மூர்ஸ் சாலை வழியாக, இம்மாதம் 3ல் சைக்கிளில் சென்றார். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சக்திவேலிடம் இருந்த மொபைல்போனை பறித்து தப்பினர்.
விசாரித்த போலீசார் ஓட்டேரி, சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்த வசந்தகுமார், 23, என்பவரை நேற்று கைது செய்து, போனை பறிமுதல் செய்தனர்; மற்றொருவரை தேடி வருகின்றனர்.
போலீசாரிடம் இருந்து தப்பிக்க முற்பட்டபோது தவறி விழுந்த வசந்தகுமாருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து மாவு கட்டுப்போடப்பட்டுள்ளன.
'மொபெட்' திருடிய
இருவர் கைது
கீழ்ப்பாக்கம்: புரசைவாக்கம், வெள்ளாளர் தெருவில் வசிப்பவர் சங்கர், 55. இவரது 'ஆக்டிவா' ஸ்கூட்டம் வாகனம், இம்மாதம் 15ல் திருடுபோனது.
கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரித்து, வாகனத்தை திருடிய புரசைவாக்கம், சாலைமா நகரைச் சேர்ந்த கார்த்திக், 20, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, சங்கரின் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.