
தவறி விழுந்து தொழிலாளி பலி
புழல்: புழல் அடுத்த தண்டல்கழனியில், திருமண மண்டப கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்குவங்கத்தை சேர்ந்த நசிம்ஷேக், 16, என்பவர், நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார். செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி காவலாளி உயிரிழப்பு
நீலாங்கரை: கொட்டிவாக்கம், ராஜா கல்யாணி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 58; தனியார் நிறுவன காவலாளி. இவர், நேற்று இ.சி.ஆர்., வெட்டுவாங்கேணி சிக்னலில் சாலையை கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வந்த கார் சைக்கிளில் மோதியது. இதில், கிருஷ்ணன் உயிரிழந்தார். துரைப்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநரான பத்மநானை, 34 அடையாறு போலீசார் கைது செய்தனர்.
ரூ.2 லட்சம் போதை பொருள் பறிமுதல்
செங்குன்றம்: செங்குன்றம், வண்டிமேடு பகுதியில், வீட்டில் பதுக்கிய 65 கிராம் மெத் ஆம் பெட்டமைன் போதை பொருளை, போலீசார் பறிமுதல் செ ய்தனர். இவற்றின் மதிப்பு 2 லட்சம் ரூபாய். இதுதொடர்பாக, நாரவாரிகுப்பத்தைச் சேர்ந்த சர்மா பாத்திமா, 30, கவுசியா, 35, மணிவண்ணன், 27, மதிவாணன், 28 ஆகியோரை கைது செய்தனர்.
பஸ் ஊழியர்கள் மீது தாக்குதல்
பரங்கிமலை: கடலுாரில் இருந்து கோயம்பேடு நோக்கி, நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு பேருந்து வந்தது. கிண்டி கத்திப்பாரா அருகே, பேருந்துக்கு வழிவிடாமல் கார் சென்றுள்ளது. பேருந்து ஓட்டுநரான ராஜ்மோகன், 45, 'ஹார்ன்' எழுப்பி உள்ளார். ஆத்திரமடைந்த கார் ஓட்டுநரான அடையாறு, இந்திரா நகரைச் சேர்ந்த கேசவன், பேருந்தை மறித்து காரை நிறுத்தி, பேருந்து ஓட்டுநர் ராஜ்மோகன் மற்றும் நடத்துநரை கேசவன் தாக்கியுள்ளார். இருவரும், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.