பிரியாணி திருடர்கள்
3 பேர் கைது
பாரிமுனை:
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அரவிந்த், 22. இவரது தாயும், தந்தையும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்து வரும் கட்டுமான பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு பிரியாணி, சூ
ப் வாங்கிக் கொண்டு, மெமோரியல் ஹால் ரவுண்டானா அருகே அரவிந்த் சென்றார். அவரை வழிமறித்த மூன்று பேர், அவரிடம் இருந்த மொபைல் போன், அணிந்திருந்த கவரிங் செயின் மற்றும் பிரியாணி, சூப் ஆகியவற்றை பறித்து தப்பினர்.
பூக்கடை போலீசார் வழக்கு பதிந்து, பிராட்வேயைச் சேர்ந்த தனுஷ், 22, சதிஷ், 21, கார்த்திக், 32 ஆகியோரை கைது செய்தனர்
.
11 கிலோ கஞ்சா
கடத்திய பெண் கைது
செங்குன்றம்:
செங்குன்றம், மொண்டியம்மன் சோதனை சாவடி அருகே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த திவ்யா, 28 என்பவர், பெண் ஒருவரிடம் 11 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. அவர்
ஒடிஷாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்தது தெரிய
வந்தது. இதையடுத்து, போலீசார் திவ்யாவை கைது செய்து புழல்
சிறையில் அடைத்தனர்.
தலைமறைவு குற்றவாளிகள் மூவர் கைது
ஓட்டேரி:
தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொலை முயற்சி மற்றும் இரண்டு கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய புரசைவாக்கத்தைச் சேர்ந்த நித்திஷ், 26, ஓட்டேரியைச் சேர்ந்த பிரகாஷ், 32 மற்றும் புரசைவாக்கத்தை சேர்ந்த கார்த்திக், 27 ஆகியோர் ஜாமினில் வெளிவந்தனர். ஆனால், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து, தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார் மூவரையும் நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கத்தியால் வெட்டி
வழிப்பறி
ஆர்.கே.நகர்:
பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல், 28; ஸ்டீல் பாத்திரங்கள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று, ஆர்.கே.நகர், சி.பி.ரோடு, முத்துமாரியம்மன் கோவில் எதிரே நின்றபோது, அங்கு வந்த மர்ம நபர், சக்திவேலை கத்தியால் தாக்கி, 1,700 ரூபாய் பறித்து சென்றனர். விசாரித்த ஆர்.கே.நகர் போலீசார் வழிப்பறியி
ல் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ், 33 என்பவரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.
காதலியை தேடிசென்ற வாலிபருக்கு கத்தி குத்து
புதுவண்ணாரப்பேட்டை:
ஆர்.கே.நகர், 6வது தெருவைச் சேர்ந்தவர் பாபு, 28. இவர், தண்டையார்பேட்டை, வ.உ.சி.நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். நேற்று அப்பெண்ணை பார்ப்பதற்காக, வ.உ.சி.நகர், 8வது தெரு வழியாக நடந்து சென்றபோது, அங்கு வந்த ஐந்து பேர் கும்பல் பாபுவை வழிமறித்து, 'எதற்காக எங்கள் பகுதி பெண்ணை காதலிக்கிறாய்' எனக்கேட்டு, கத்தியால் குத்தியும் கல்லால் தாக்கியும் தப்பினர். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மரு
த்துவமனையில் சேர்த்தனர். கொலை முயற்சியில் ஈடுபட்ட தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன், 32, சூர்யா, 26, முருகவேல், 30, சாந்தகுமார், 36, ரிச்சர்ட் ஹட்லி, 34 ஆகிய ஐவரை போலீசார் நேற்று கைது
செய்தனர்.