மாணவியிடம் அத்துமீறிய
மாணவனிடம் விசாரணை
புளியந்தோப்பு: புளியந்தோப்பு சரக காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவியை, அதே கல்லுாரியில் படித்த மணி, 20, என்ற மாணவர், தன் பிறந்த நாளை கொண்டாட ரெட்டேரியில் உள்ள லாட்ஜுக்கு அழைத்து சென்றார்.
அங்கு மாணவியை மது அருந்த வற்புறுத்தி, பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். மாணவியின் தாய் அளித்த புகாரின்படி, செம்பியம் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து, மணியிடம் விசாரிக்கின்றனர்.
மூதாட்டியிடம்
நகை பறிப்பு
ஆவடி: திருமுல்லைவாயில், கிழக்கு மாட வீதி, வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் வத்சலா, 80. நேற்று அதிகாலை இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, வத்சலா அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்க சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த ஒரு சவரன் வளையல் ஆகியவற்றை பறித்தனர்.
வத்சலாவின் சத்தம் கேட்டு, முதல் மாடியில் இருந்து, அவரது மகளும், மருமகனும் இறங்கி வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பினர். திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வீடு, கடையில்
நகை, பணம் திருட்டு
ஆவடி: திருமுல்லைவாயில், சுப்பிரமணியன் நகரைச் சேர்ந்த சந்திராமோகன், 58, என்பவர், நேற்று காலை பணி முடிந்து திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, இரண்டு கிராம் தங்க நகை, 5,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது.
அதேபோல், மாசிலாமணீஸ்வரர் நகரைச் சேர்ந்த விஜயா, 60, என்பவர் நடத்தும் பெட்டிக்கடையின் பூட்டை உடைத்து, 2,500 ரூபாய் திருடப்பட்டது. இரு சம்பவங்கள் குறித்தும், திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வயிற்று வலியால்
நர்ஸ் தற்கொலை
திருவொற்றியூர்: திருவொற்றியூர் பூங்கா நகரைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரியா, 21. செவிலியர். வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர், நேற்று முன்தினம் இரவு, மருந்து கடையில் மாத்திரை வாங்கி வருமாறு தாயை அனுப்பி வைத்தார்.
அவர் மாத்திரை வாங்கி வருவதற்குள், வீட்டின் மின்விசிறியின் தாயின் புடவையால் துாக்கிட்டு, விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டார்.
படப்பை படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்த நாகராஜன் மனைவி அனுசியா, 29. திருமணமாகி 11 ஆண்டுகளாகின்றன. இரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அறையில் அனுசியா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.