ADDED : நவ 29, 2025 03:18 AM
அ நிறம் | அளவு
தலைமறைவு குற்றவாளி கைது
வியாசர்பாடி: வியாசர்பாடி, 'பி' கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ்வரன், 29; வியாசர்பாடி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. கடந்த 2024ல், ஒரு குற்ற வழக்கிற்காக சிறை சென்று ஜாமினில் வெளியில் வந்தார். பின், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில்
ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை பிடிக்க 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. போலீசார் நேற்று, வியாசர்பாடியில் தினேஷ்வரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
