
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.1.80 லட்சம் கஞ்சா பறிமுதல்
அம்பத்துார்: பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்ற திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இக்பால் ஹூசைன், 25, என்பவர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய சோதனையில் 1.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.

