தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : நவ 30, 2025 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 01:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நொளம்பூரில் ரூ.3 லட்சம் 'ஹெராயின்' பறிமுதல்

நொளம்பூர்: நொளம்பூர், சாணக்கியன் தெருவில் 'ஹெராயின்' போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராஜிப், 21, என்பவரை, போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார், நேற்று முன்தினம் மடக்கி பிடித்து, நொளம்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர் அளித்த தகவலின்படி, பீஹாரைச் சேர்ந்த முகமது ரூபல், 32, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரோஜ், 27, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 100 கிராம் ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவில் உண்டியலில் சிறுவர்கள் கைவரிசை

தாம்பரம்: இரும்புலியூர், ஸ்ரீ கவுரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள், உண்டியல் உடைக்க முயன்றது தெரிய வந்தது. தகவல் அறிந்த தாம்பரம் போலீசார், அங்கு சென்று மர்ம நபர்களை துரத்தி சென்று, ஒரு வீட்டின் மாடியில் சுற்றி வளைத்தனர்.

அதில், ஒருவர் தப்ப வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்தபோது, அருங்கிருந்த கம்பி குத்தி இடது உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில், 15, 16, 18 வயது சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.

'காமுக' முதியவருக்கு 'காப்பு'

சென்னை: தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் அண்ணாநகரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது, முதியவர் ஒருவர் முத்தம் கொடுப்பது உட்பட பல்வேறு விதமாக சைகை செய்துள்ளார். திருமங்கலம் போலீசார், திருவொற்றியூரைச் சேர்ந்த கணேசன், 64, என்பவரை, நேற்று கைது செய்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் பைக் எரிப்பு

தாம்பரம்: மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த, 38 வயது பெண், கணவர் பிரிந்து செ ன்று நிலையில், இரு மகன்களுடன் வசித்து வருகிறார். அப்பெண்ணுக்கு, மகேஸ்வரன் என்பவர் பழக்கமாகியுள்ளார்.

நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், மகேஸ்வரன் பணம் பறிப்பதிலேயே குறிக்கோளாக இருப்பதை அறித்த அப்பெண், இனி வீட்டிற்கு வர வேண்டாம் எனக்கூறி, மகேஸ்வரனை அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி, வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டி ருந்த அப்பெண்ணின் இருசக்கர வாகனத்தை, மகேஸ்வரன் தீயிட்டு எரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

போலி லாட்டரி தயாரித்தவர் சிக்கினார்

செம்மஞ்சேரி: சோழிங்கநல்லுார் பகுதியில், கேரள லாட்டரியை போல், போலியாக லாட்டரி அச்சடித்து வியாபாரம் செய்து வந்த செம்மஞ்சேரி, சுனாமி நகரைச் சேர்ந்த முரளி, 47, என்பவரை செம்மஞ்சேரி போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். போலி லாட்டரி சீட்டுகள் மற்றும் அச்சு இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓட்டுநரை தாக்கி ஆம்னி பஸ் கடத்தல்

வானகரம்: - மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், 35. இவர் எழும்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், கடந்தாண்டு 24.50 லட்சம் ரூபாய் கடனாக பெற்று, ஆம்னி பேருந்து ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்த பேருந்தை, சென்னையில் இருந்து மதுரை வரைஇயங்கி வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களாக மாத தவணை கட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தாம்பரம் --- மதுரவாயல் பைபாஸ் சாலையில், வானகரம் அருகே நின்ற ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் ஆறுமுகத்தை தாக்கி, ஆம்னி பேருந்தை பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.வானகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

காவல் நிலையத்திற்கு குண்டு மிரட்டல்

மதுரவாயல்: மதுரவாயல் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, காவல் கட்டுப்பட்டு அறைக்கு, மர்ம நபர் ஒருவர், நேற்று மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்று, இரண்டு மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.

இதில் வெடிகுண்டு ஏதும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

அதிவேகமாக சென்ற கார் மோதி வாலிபர் பலி

திருவான்மியூர்: திருவான்மியூர், ஆர்.டி.ஓ., சிக்னலில் நேற்று அதிகாலை, 35 வயது மதிக்கத்தக்க நபர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து நீலாங்கரை நோக்கி அதிவேகமாக சென்ற கார், அந்த நபர் மீது மோதி நிற்காமல் சென்றது.

பலத்த காயமடைந்த நபர், சம்பவ இடத்திலேயே பலியானார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us