/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரைம் கார்னர்: கைக்குழந்தை மர்ம மரணம்
/
கிரைம் கார்னர்: கைக்குழந்தை மர்ம மரணம்
ADDED : டிச 22, 2025 04:11 AM
எம்.கே.பி.நகர்:: வியாசர்பாடி: நகரைச் சேர்ந்தவர்கள் இமான். இவரது: மனைவி சங்கீதா. இவர்களுக்கு பவித்ரா: நித்ரா: வைத்துள்ளார். நேற்று காலை பார்த்தபோது: விசாரிக்கின்றனர்.: அடகு கடை உரிமையாளர் 'ஓட்டம்'
வியாசர்பாடி: வியாசர்பாடி, எம்.எம்.கார்டன் பகுதியில் கிஷன்லால் என்பவர், அடகு கடை நடத்தி வருகிறார். அக்கடையில் அதே பகுதியைச் சேர்ந்த காவேரி, 35 என்பவர், தன் 5 சவரன் நகைகள் மற்றும் 2 வெள்ளி கொலுசுகளை, கடந்த 2024ல் அடகு வைத்தார். இவரை போன்று, அப்பகுதியைச் சேர்ந்த பலரும், தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 10 மாதமாக கடையை திறக்காமல் கிஷன்லால், பூட்டியே வைத்துள்ளார். இது குறித்து மொபைல்போனில் காவேரி கேட்டதற்கு, வெளியூரில் இருப்பதாகவும் இரு தினங்களில் கடையை திறப்பதாகவும் கிஷன்லால் கூறியுள்ளார். இந்த நிலையில், மக்கள் அடகு வைத்த நகைகளோடு, கிஷன்லால் கடையை காலி செய்து, நேற்று மாயமானார். இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற ஐ.டி., ஊழியர் சிக்கினார்
கொடுங்கையூர்: கொடுங்கையூர், கவிஞர் கண்ணதாசன் நகரில் கஞ்சா விற்பதாக கொடுங்கையூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு, தண்டையார்பேட்டை, சாஸ்திரி நகரைச் சேர்ந்த தீபக், 25, ஆவடி, ஜீவா நகரைச் சேர்ந்த விக்னேஷ், 23, காட்டுப்பாக்கம், செல்லம்மா நகரைச் சேர்ந்த ஐ.டி., நிறுவன ஊழியரான வெற்றி விக்னேஷ், 27, அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த ஆகாஷ், 27 ஆகியோரை, நேற்று கைது செய்து 3 கிலோ கஞ்சா, மூன்று பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்தனர்.
மனைவியை தாக்கிய ரவுடி கைது
தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை, சிவாஜி நகரைச் சேர்ந்தவர் தினேஷ், 24. இவரது மனைவி மோகனா, 24. வழக்கம்போல, தினேஷ் நேற்றும் மது அருந்தி வந்து, மோகனாவை தகாத வார்த்தைகளால் பேசி, சரமாரியாக தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த மோகனா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து விசாரித்த ஆர்.கே.நகர் போலீசார், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்கு பதிந்து தினேஷை நேற்று கைது செய்தனர்.
சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம்
ஆவடி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாளை, நேற்று ஆந்திராவில் அவரது கட்சியினர் கொண்டாடினர். இந்த நிலையில், ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் படிக்கும், 100க்கும் மேற்பட்ட ஆந்திர மாநில மாணவர்கள், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி கொடி ஏந்தி, கல்லுாரி அருகே ஜெகன்மோகன் ரெட்டி பிறந்த நாளை, சரவெடி வெடித்து நேற்று மாலை கொண்டாடினர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீடு புகுந்து திருடிய இருவர் கைது
ஆவடி: ஆவடி அடுத்த வெள்ளானுார், நேரு நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன், 39; கொத்தனார். இவரது மனைவி ரேவதி, 35. கடந்த நவ., 28ம் தேதி ரேவதி, அம்பத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று, மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த நான்கு கிராம் தங்க நகைகள் திருடு போனது தெரிந்தது. இது குறித்து விசாரித்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், திருட்டில் ஈடுபட்ட பொத்துார், பவானி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஷ்ணு, 20, அம்பத்துார், புதுாரைச் சேர்ந்த பெருமாள், 19 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

