தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்: ரயில்வே ஊழியரிடம் வழிப்பறி

 கிரைம் கார்னர்: ரயில்வே ஊழியரிடம் வழிப்பறி

 கிரைம் கார்னர்: ரயில்வே ஊழியரிடம் வழிப்பறி


ADDED : ஜன 05, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரயில்வே ஊழியரிடம் வழிப்பறி

ஆவடி: ஆவடி அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 30; அண்ணனுார் ரயில்வே பணிமனையில் தொழில்நுட்ப ஊழியர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, கோபாலபுரம் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றபோது, 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், ரஞ்சித்குமாரின் மொபைல் போன், பர்ஸ் ஆகியவற்றை பறித்தனர். தடுக்க முயன்ற அவரை கத்தியால் வெட்டினர். இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

வியாசர்பாடி: வியாசர்பாடி, கென்னடி நகரைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா, 21; துாய்மை பணியாளர். நேற்று, வீட்டை பூட்டி உறவினர் வீட்டிற்கு சென்றார். திரும்பி வந்தபோது, வீட்டில் இருந்த தங்கச் செயின், வெள்ளி கொலுசு, பிரேஸ்லெட் மற்றும் 2,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

'ஜிம்' நடத்தி ரூ.2 லட்சம் மோசடி

கொடுங்கையூர்: கொடுங்கையூர், எஸ்.ஏ.காலனியைச் சேர்ந்தவர் சேவியர்சுகன், 27; கொடுங்கையூர், டி.எச்., சாலையில் உடற்பயிற்சி கூடத்தில் ஆண்டுக்கு, 10,000 ரூபாய் என, 20க்கும் மேற்பட்டோர், 2 லட்சம் ரூபாய் செலுத்தி, உறுப்பினராக சேர்ந்துள்ளார். இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, உடற்பயிற்சி கூடத்தை மூடியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கொடுங்கையூர் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பூங்காவில் 'போதை' பயன்பாடு

ஓட்டேரி: ஓட்டேரியில் உள்ள பூங்கா ஒன்றில், சிலர் போதை பொருள் உபயோகிப்பதாக கிடைத்த தகவலின்படி, ஓட்டேரி போலீசார் அங்கு சென்று, மூன்று வாலிபர்களை பிடித்தனர். அவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த சல்மான்கான், 27, கலைச்செல்வன், 21, மற்றும் ராஜ்குமர், 19, என தெரிந்தது. போலீசார் மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து போதையை தரக்கூடிய எட்டு வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us