ADDED : ஜன 06, 2026 05:59 AM

அ நிறம் | அளவு
ஆவடி: ஆவடி அடுத்த சேக்காடை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 30. கடந்த 3ம் தேதி இரவு பணி முடிந்து, கோபாலபுரம் வழியாக நடந்து சென்ற போது, 'பஜாஜ் பல்சர்' பைக்கில் வந்த மூவர், ரஞ்சித்குமாரை தாக்கி, மொபைல் போன், பர்ஸ் ஆகியவற்றை பறித்து தப்பினர்.
புகாரின்படி, பட்டாபிராம் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட பட்டாபிராம் நித்திஷ், 24, பாடி சசி, 28, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கோபி என்பவரை தேடி வருகின்றனர்.
