தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : ஜன 15, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 06:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண் சடலம் கூவத்தில் மீட்பு



அண்ணா சதுக்கம்: பெருங்களத்துார் பகுதியைச் சேர்ந்தவர் யுவஸ்ரீ, 25; விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டே, அண்ணா பல்கலையில் எம்.பி.ஏ., படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மதியம், கடிதம் எழுதி வைத்துவிட்டு, நேப்பியர் பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் குதித்தார். தீயணைப்பு படை வீரர்கள் நேற்று காலை 7:30 மணிக்கு, பெண்ணின் சடலத்தை மீட்டனர். அண்ணா சதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

21 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது



அண்ணா நகர்: பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் இருந்து ஆட்டோ ஏறி சென்றவரை, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசார் துரத்தி சென்று, கோயம்பேடு சந்தை அருகே பிடித்தனர்.

அவரது உடைமையில் 21 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது.

விசாரணையில், திரிபுரா மாநிலம், மாதிநகரைச் சேர்ந்த அல் அமீன், 22; என்பதும், கொல்கட்டாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வருவதும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து நேற்று முன்தின ம் இரவு சிறையில் அடைத்த னர்.

'

மாஞ்சா' காற்றாடி விட்டவர் கைது



ஓட்டேரி: ஓட்டேரி, சந்தியப்பன் முதல் தெருவில், தடை செய்யப்பட்ட மாஞ்சா நுால் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்ட, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 19; என்ற நபரை, தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார், நேற்று முன்தினம் கைது செய்து, அவரிடமிருந்து காற்றாடி, மாஞ்சா நுாலை பறிமுதல் செய்தனர். விசாரணையில், வெங்கடேசன் 'ஆன்லைன்' வாயிலாக மாஞ்சா நுால் மற்றும் காற்றாடி வாங்கியது தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us