தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : ஜன 17, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 05:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மொபைல் போன் பறித்தவர் கைது


கோயம்பேடு: பாடி அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அஜய்குமார், சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு செல்ல, நேற்று முன்தினம், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நடந்த வந்தார்.

வழி யில், அவரை மிரட்டி மொபைல் போனை பறித்து தப்பிய ராணிப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஈசாக், 23, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்து மொபைல் போனை மீட்டனர்.

 ஓட்டேரி, பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், 38, என்பவரின் வீட்டிற்குள் புகுந்து, மொபைல் போன் திருடி ஆட்டோவில் தப்பிய ஆகாஷ்ராஜ், 27, என்பவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, மொபைல் போன் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இவர் மீது 16 வழக்குகள் உள்ளன.

ஸ்கூட்டர்கள் தீக்கிரை


ஆவடி: ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாலையில், 'ஸ்ரீஹரி ஆட்டோமொபைல்ஸ்' என்ற பெயரில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் சுரேஷ், 40.

பொங்கலை முன்னிட்டு, கடந்த 13ம் தேதி முதல் கடை மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடை முன் சர்வீஸ் செய்ய நிறுத்தப்பட்டு இருந்த, இரண்டு 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர்கள் நேற்று, திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகின.

ரயிலில் கஞ்சா கடத்தியவர் கைது


சென்னை: அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகே, திருவல்லி க்கேணி போலீசார், நேற்று கா லை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆட்டோவில் வந்த வெளிமாநில நபரை பிடித்து, உடைமைகளை சோதனை செய் தபோது, 5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், ஒடிஷா மா நிலத் தைச் சேர்ந்த சோனு நாயக், 23, எ ன்ப தும், தி.நகரில் உள்ள அவரது நண்பர் ரஞ்சித், 35, என்பவருக்காக கஞ் சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. போலீசார், சோனு நா யக்கை கைது செய்தனர்.

ஆவடி கமிஷனரகத்தில் 84 ரவுடிகள் கைது


ஆவடி: ஆவடி போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்படி, இம்மாதம் ஒன்றாம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, ஆவடி காவல் மாவட்டத்தில் 39 ரவுடிகள், செங்குன்றத்தில் 45 ரவுடிகள் என, 84 பழைய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கஞ்சா தொடர்பாக, 12 வழக்குகளில், 19 பேர் கைது செய்யப்பட்டு, 25.55 கிலோ கஞ்சாவும், குட்கா தொடர்பாக ஆறு வழக்குகளில், ஆறு பேர் கைது செய்யப்பட்டு, 30.37 கிலோ போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us