தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : ஜன 20, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒருவரை ஒருவர் தாக்கியபோதை ஆசாமிகள் காயம்

வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டையில், போதையில் கூலித்தொழிலாளியை தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

பழைய வண்ணாரப்பேட்டை, ஜெயராமன் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சாதிக், 29; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மது போதையில் வண்ணாரப்பேட்டை, கண்ணன் ரவுண்டானா சாலையில் நின்றிருந்த டூ - வீலரை எடுத்தபோது, பெயின்டரான கொருக்குப்பேட்டை, ஜே.ஜே., நகரைச் சேர்ந்த நாகராஜ், 29, என்பவரும் போதையில் வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வீண் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஒருவருக்கு ஒருவர் அடித்து தாக்கிக் கொண்டதில், நாகராஜுக்கு கையிலும், அப்துல் சாதிக்கிற்கு உதட்டிலும் காயங்கள் ஏற்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் அப்துல் சாதிக்கிற்கு, உதட்டில் 8 தையல்கள் போடப்பட்டுள்ளன. இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர் .

ஆட்டோ ஓட்டுநரிடம்

பணம் பறித்தவர் கைது

காசிமேடு: ஆட்டோ ஓட்டுநரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

ராயபுரம், சோமு செட்டி தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல், 32; ஆட்டோ ஓட்டுநர். நேற்று காசிமேடு கடற்கரையில் நடந்து சென்றபோது, அங்கு நின்றிருந்த லோகேஷ், சக்திவேலிடம் மதுகுடிக்க பணம் கேட்டார்.

அதற்கு சக்திவேல் தன்னிடம் பணம் இல்லையென கூறிய போது, லோகேஷ், சக்திவேலை தகாத வார்த்தைகளால் திட்ட, ஆத்திரமடைந்த லோகேஷ், சக்திவேலை கத்தியை காட்டி மிரட்டி, அவர் சட்டப்பையில் இருந்த 500 ரூபாய் பணத்தை பறித்து சென்றார். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட, காசிமேடு, ஜீவரத்தினம் நகரை சேர்ந்த லோகேஷ், 19, என்பவரை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us