தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்...:1 செனனை

 கிரைம் கார்னர்...:1 செனனை

 கிரைம் கார்னர்...:1 செனனை


ADDED : ஜன 23, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தீக்குளித்தவர் பலி

மாதவரம்: திருவள்ளூர் அடுத்த வெள்ளிவாயில் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்யராஜ், 43.

மாதவரம், ரெட்டேரி அருகே உள்ள தனியார் விடுதியில், கடந்த 20ம் தேதி அறை எடுத்து தங்கிய அவர் அன்று மாலை தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். தீக்காயத்துடன் கீழ்ப் பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை உயிரிழந்தார்.

-- திருடர்கள் கைது

வேளச்சேரி: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த நசீம், 21, வேளச்சேரியில் 'ஏசி' மெக்கானிக்காக பணிபுரிகிறார். கடந்த 2ம் தேதி, நசீமை தாக்கி 3,000 ரூபாயை பறித்து தப்பிய, வேளச்சேரியைச் சேர்ந்த அஜய், 28, பாலுசாமி, 28, ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

விபத்தில் 'டான்சர்' பலி

அம்பத்துார்: சூளைமேடு, ஜோதி ராமலிங்கம் தெருவைச் சேர்ந்த சினிமா நடன கலைஞர் கார்த்திக், 26. 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் நேற்று முன்தினம் சென்ற போது கள்ளிக்குப்பம், சுங்கச்சாவடி அருகே, பஞ்சராகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 'பொலீரோ' சரக்கு வாகனத்தில் மோதி பலியானார். விபத்துக்கு காரணமான சரக்கு வாகன ஓட்டுநர் நிர்மல், 22, என்பவரை, போலீசார் செய்து செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us