தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : பிப் 03, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 06:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கஞ்சா விற்ற சகோதரியர் பிடிபட்டனர்

ஓட்டேரி: ஓட்டேரி, திடீர் நகரில் நேற்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ரேகா, 39, அவரது தங்கை மரியா, 23 ஆகியோரை, தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார் கைது செய்தனர்; 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல, வியாசர்பாடி, பி கல்யாணபுரத்தில் கஞ்சா விற்ற இன்பா, 22, என்பவரை, வியாசர்பாடி போலீசார் நேற்று கைது செய்தனர்.

வியாபாரிகளிடம் பணம் பறித்த ஐவருக்கு 'காப்பு'

புளியந்தோப்பு: புளியந்தோப்பு ஆடுதொட்டி அருகே வியாபாரிகளை மிரட்டி, பணம் பறித்த புளியந்தோப்பு கஸ்துாரிபாய் காலனி பகுதியைச் சேர்ந்த மணியரசன், 21, செல்வம், 23, கார்த்தி, 32, மணிகண்டன், 21, பிரசாந்த், 26 ஆகிய ஐந்து பேரை, நேற்று புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us