தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்: ரூ.27 லட்சம் ஏமாற்றிய தம்பதி கைது

 கிரைம் கார்னர்: ரூ.27 லட்சம் ஏமாற்றிய தம்பதி கைது

 கிரைம் கார்னர்: ரூ.27 லட்சம் ஏமாற்றிய தம்பதி கைது


ADDED : பிப் 12, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாண்டிபஜார்: தி.நகர், தர்மபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், 36, அவரது மனைவி புவனேஸ்வரி, 32, ஆகியோர், தீபாவளி சீட்டு நடத்தினர். இவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதவாணி, 32, உட்பட 250 பேர் மாதம் 1,000 ரூபாய் என, 11 மாதங்களுக்கு, 27.50 லட்சம் ரூபாயை கட்டியுள்ளனர்.

சீட்டு கட்டும் காலம் முடிந்தும், அவர்களது பணத்தை திருப்பிக் கொடுக்காமல் தம்பதி ஏமாற்றி, தலைமறைவாகினர். இதுகுறித்த புகாரை விசாரித்து வந்த போலீசார், குன்றத்துாரில் பதுங்கியிருந்த தினேஷ்குமார், 36, புவனேஸ்வரி, 32, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர்.

மேம்பால சுவரில் மோதி கார் கவிழ்ந்து விபத்து

போரூர்: போரூர் அடுத்த, கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜு, 32; தனியார் நிறுவனத்தில் ஊழியர். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து, 'ஹோண்டா ஜாஸ்' காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

மவுன்ட் - பூந்தமல்லி சாலை, போரூர் மேம்பாலம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்பு சுவரின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் ராஜு, காயம் ஏதுமின்றி தப்பினார். விபத்துக்குள்ளான காரை, 'கிரேன்' இயந்திரம் வாயிலாக, ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் அப்புறப்படுத்தினர்.

காப்பர் வடம் திருடியவர் கைது

தேனாம்பேட்டை: தேனாம்பேட்டை, ஜெயமால் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபிரியா, 55. கடந்த 8ம் தேதி இரவு, இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், ஸ்டோர் ரூம் கதவை உடைத்து, காப்பர் வடங்களை திருடிச் சென்றார்.

தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து, தி.நகர், டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்த ஸ்ரீகுமார், 27, என்பவரை, நேற்று கைது செய்து, காப்பர் வடங்களை பறிமுதல் செய்தனர்.

அரிவாளுடன் பதுங்கிய இரு வாலிபர்கள் கைது

கிண்டி: கிண்டி, நாகிரெட்டி தோட்டம் அருகில் உள்ள காலி இடத்தில், நேற்று முன்தினம் இரவு, இரண்டு பேர் பதுங்கியிருந்தனர். ரோந்து பணியில் இருந்த கிண்டி போலீசார், அவர்களை பிடித்தனர்.

விசாரணையில், காரப்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ், 30, ஜெகதீஷ், 26, எனவும், ஒரு வாலிபரை தாக்க மறைந்திருந்ததும் தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், இரண்டு அரிவாள்கள் மற்றும் ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us