sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கிரைம் கார்னர்

/

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : பிப் 21, 2026 06:00 AM

Google News

ADDED : பிப் 21, 2026 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஹான்ஸ்' விற்ற ஐஸ்கிரீம் வியாபாரி கைது

வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை, ராமதாஸ் நகரில், ஐஸ்கிரீம் விற்கும் போர்வையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான 'கூல் லிப், ஹான்ஸ்' விற்ற மோகன், 51, என்பவரை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்; 500 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 கோயம்பேடு சந்தையில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன், 41, என்பவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

நடைபாதை பழக்கடை எரிப்பு

பேசின்பாலம் ரயில் நிலைய நுழைவாயில் அருகே நடைபாதையில் பழக்கடை நடத்தி வருபவர் அன்புச்செழியன், 58. இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், பழக்கடையை மூடி சென்றார். நேற்று காலை வந்தபோது, கடை தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த 40,000 ரூபாய் மதிப்பிலான பழங்கள், தண்ணீர் பாட்டில்கள் நாசமாயின. இது குறித்து, பேசின்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

வாடகைதாரரை தாக்கியவருக்கு வலை

ஓட்டேரி, வாழைமா நகரில் வாடகை வீட்டில் வசிப்பவர் அருண்குமார், 41. இவரது வீட்டின் உரிமையாளரான உடையார், 58, மது போதையில், நேற்று முன்தினம் இரவு அருண்குமாரிடம் சத்தம் போட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் அருண்குமாரை, உடையார் மற்றும் அவருக்கு பழக்கமான ஜோதி, 52, ஆகியோர் தாக்கி உள்ளனர். காயமடைந்த அருண்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரின்படி, ஜோதியை போலீசார் கைது செய்தனர்; உடையாரை தேடி வருகின்றனர்.

ஆட்டோ பேட்டரி திருடியவர் சிக்கினார்

புளியந்தோப்பு, சாஸ்திரி நகரைச் சேர்ந்த சுந்தர், 44; ஆட்டோ ஓட்டுநர். இவரது ஆட்டோவில் இருந்த 5,000 ரூபாய் மதிப்பிலான பேட்டரி, நேற்று திருட்டு போனது. விசாரித்த புளியந்தோப்பு போலீசார், பேட்டரி திருடிய ரவிக்குமார், 35, என்பவரை, கைது செய்தனர்.

மாணவியின் லேப்டாப் திருடியவர் கைது

வடபழனி: புதுச்சேரியைச் சேர்ந்தவர் பரணிலட்சுமி, 18; கல்லுாரி மாணவி. வடபழனியில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்த பயிற்சி பட்டறைக்கு, கடந்த 9ம் தேதி வந்திருந்தார்.

அதேபகுதியில் உள்ள தனியார் மாலில் மூன்றாவது தளத்தில் உணவு வாங்க சென்றபோது, அவரது லேப்டாப், மொபைல் போன் திருடுபோனது. விசாரித்த வடபழனி போலீசார், திருட்டில் ஈடுபட்ட கோவை, கோட்டைமேடு பகுதியை சேர்ந்த முகமது நஸ்ருல்லா, 42, என்பவரை நேற்று கைது செய்தனர்; லேப்டாப், மொபைல் போன் மீட்கப்பட்டது.

தீ விபத்தில் ஆசிரியை படுகாயம்

குன்றத்துார்: குன்றத்துார், மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் அனுராதா, 55; ஆசிரியை. இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனியாக வசித்து வந்தார்.

இவரது வீட்டின் சமையல் 'காஸ்' சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வீடு முழுதும் பரவி இருந்துள்ளது. இதை உணராத அனுராதா, நேற்று காலை பூஜை அறையில் அகல் விளக்கு ஏற்றிய போது உடலில் தீப்பிடித்துள்ளது. தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவியின் லேப்டாப் திருடியவர் கைது

வடபழனி: புதுச்சேரியைச் சேர்ந்தவர் பரணிலட்சுமி, 18; கல்லுாரி மாணவி. வடபழனியில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்த பயிற்சி பட்டறைக்கு, கடந்த 9ம் தேதி வந்திருந்தார்.

அதேபகுதியில் உள்ள தனியார் மாலில் மூன்றாவது தளத்தில் உணவு வாங்க சென்றபோது, அவரது லேப்டாப், மொபைல் போன் திருடுபோனது. விசாரித்த வடபழனி போலீசார், திருட்டில் ஈடுபட்ட கோவை, கோட்டைமேடு பகுதியை சேர்ந்த முகமது நஸ்ருல்லா, 42, என்பவரை நேற்று கைது செய்தனர்; லேப்டாப், மொபைல் போன் மீட்கப்பட்டது.

விடுதியில் புரோக்கர் தற்கொலை

கோயம்பேடு: சாலிகிராமம், தசரதபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன், 46; நிலத்தரகர். கோயம்பேடு சின்மயா நகரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். சடலத்தை மீட்டு கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

தீக்குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

மணிமங்கலம்: மணிமங்கலம், கரசங்கால், செங்காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ், 25; வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான சதீஷை, அவரது தாய் செல்வி கண்டித்துள்ளார். கடந்த 17ம் தேதி ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த சதீஷ் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்; கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று உயிரிழந்தார்.

பெண் உடை மாற்றுவதை பார்த்தவர் கைது

குமரன் நகர்: குமரன் நகர் காவல் எல்லையைச் சேர்ந்தவர் 19 வயது பெண், அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றுகிறார்.

இவர் தங்கியி ருந்த வீட்டின் குளியலறையில் நேற்று முன்தினம் உடை மாற்றிக் கொண்டிருந்தார். வீட்டின் பின்புறத்தில் உள்ள அறையில், ஹோட்டலுக்கு தேவையான சமையல் வேலை செய்யும், செங்கல்பட்டைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 28, என்பவர், பெண் குளிப்பதை௺ எட்டி பார்த்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us