sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கிரைம் கார்னர்

/

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : மார் 03, 2026 05:14 AM

Google News

ADDED : மார் 03, 2026 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'லேப்டாப்' திருடிய வாலிபர் கைது

விருகம்பாக்கம்: ஆதம்பாக்கம், ஷாவாஸ் காலனி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், 39; மெட்ரோ ரயில் பணியிடத்தில், கட்டுமான மேலாளர்.

விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் சாலையில், கன்டெய்னரில் செயல்படும் தற்காலிக அலுவலகத்தில் வைத்திருந்த இவரது மடிக்கணினி திருடுபோனது.

விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யகுமார், 20, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, மடிக்கணினியை பறிமுதல் செய்தனர்.

---

தம்பதியை தாக்கிய

வாலிபர் கைது

மதுரவாயல்: மதுரவாயலைச் சேர்ந்தவர் மணிகண்டன் 19; எலக்ட்ரீசியன். இவரது மச்சானை தாக்கிய 10ம் வகுப்பு பயிலும் சிறுவர்களை மணிகண்டன் கண்டித்துள்ளார்.

கடந்த 28ம் தேதி இரவு, தனலட்சுமி நகர் ஐந்தாவது தெருவில், நண்பரின் வீட்டருகில் தன் மனைவியுடன் நின்றிருந்தார். அங்கு வந்த சிறுவனின் உறவினர்கள் மூவர், மணிகண்டன் மற்றும் அவரது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட மதுரவாயல் போலீசார், ஜானகிராமன், 19, என்பவரை கைது செய்து, தப்பிய இருவரை தேடி வருகின்றனர்.

---

ஆட்டோ திருடிய

சிறுவன் சிக்கினான்

திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் யாகூப் செரிப், 45; ஆட்டோ ஓட்டுநர். கடந்த, 28ம் தேதி, திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில், ஏ.டி.எம்., மையம் அருகே நிறுத்தியிருந்த இவரது ஆட்டோ திருடுபோனது. திருவல்லிக்கேணி போலீசார், ஆட்டோவை திருடிய, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை நேற்று கைது செய்து, சிறார் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us