வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் நகை திருட்டு
படப்பை: படப்பை அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 39; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி, படப்பை அருகே உள்ள தனியார் பள்ளியின் ஆசிரியை.
நேற்று முன்தினம், இருவரும் வீட்டை பூட்டி பணிக்கு சென்றனர். மாலையில் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
பீரோவில் இருந்த 14 சவரன் நகைகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. செந்தில்குமார் புகாரின்படி, படப்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போதையில் நண்பரை தாக்கிய வாலிபர் கைது
சிட்லப்பாக்கம்: அஸ்தினாபுரம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாட்ஷா என்ற கோகுல்ராஜ், 29. நேற்று, அதே பகுதியை சேர்ந்த நிலக்குமார், 28, என்பவருடன் மது அருந்தினார். பின், வீட்டிற்கு சென்ற கோகுல்ராஜிடம், தன்னை வெளியே அழைத்துச் செல்லும்படி நிலக்குமார் கேட்டுள்ளார். அதற்கு மறுக்கவே, கீழே கிடந்த கல்லால் கோகுல்ராஜை கூறியுள்ளார்.
தலையில் காயமடைந்த கோகுல்ராஜ், தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிட்லப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, நிலக்குமாரை கைது செய்தனர்.

