தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : மார் 11, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹோட்டல் காவலாளி மயங்கி விழுந்து பலி

செம்மஞ்சேரி: ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரியில் 'ஏ டூ பி' ஹோட்டல் உள்ளது. இங்கு, நேபாளத்தைச் சேர்ந்த ராம்பிரசாத், 53, என்பவர் காவலாளியாக பணிபுரிந்தார். பணி முடித்து நேற்று, அங்குள்ள அறையில் தங்கினார். திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார். செம்மஞ்சேரி போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

மாணவரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

தரமணி: தரமணி அரசு சட்டக்கல்லுாரியில், சீனியர், ஜூனியர் மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஐந்தாம் ஆண்டு படிக்கும் கோவையைச் சேர்ந்த சூர்யா, 21, என்ற மாணவர் சரமாரியாக தாக்கப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக, தரமணி போலீசார் ஆறு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us