தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : மார் 12, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பட்டா கத்தியுடன்சுற்றி திரிந்த இருவர் கைது

கோயம்பேடு: கோயம்பேடு 100 அடி சாலையில் இருவர் பட்டா கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டுவதாக புகார் வந்தது. அங்கு சென்ற போலீசார், மது போதையில் கத்தியுடன் திரிந்த இருவரை பிடித்தனர்.

சின்மயா நகரைச் சேர்ந்த லோடு வேன் ஓட்டுநர் வெற்றிவேல், 29, ஆன்லைன் வர்த்தக தளமான 'அமேசான்' டெலிவரி ஊழியர் சர்குணம், 32, ஆகிய இருவரையும் கைது செய்து, 2.5 அடி நீள கத்தியை பறிமுதல் செய்தனர்.

---

நிலம் ஆக்கிரமிப்பு

அ.தி.மு.க.,

பிரமுகர் மீது புகார்

வானகரம்: பூந்தமல்லி வட்டம் அடையாளம்பட்டு கிராமத்தில் குளம் மற்றும் நத்தம் வகைப்பாடு நிலங்கள், 2,400 சதுர அடி பரப்பளவில் உள்ளன.

இந்த இடத்தை, அ.தி.மு.க., தென் சென்னை தெற்கு, மேற்கு மாவட்ட வர்த்தக அணி செயலராக உள்ள, வானகரம் ராஜன்குப்பம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், 51, என்பவர் ஆக்கிரமித்து, கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டார்.

தகவலறிந்த வானகரம் வருவாய் ஆய்வாளர் இளங்கோ, 35, கட்டுமான பணிகளை நிறுத்தியதோடு, ஆக்கிரமிப்பு குறித்து மகேஷ் மீது, வானகரம் போலீசில் புகார் அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us