தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : மார் 15, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அம்மன் கோவில் காணிக்கை திருட்டு

சோமங்கலம்: சோமங்கலம் - தாம்பரம் நெடுஞ்சாலை, நடுவீரப்பட்டு ஊராட்சி எம்.ஜி.ஆர்., நகரில் பவானி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலை நேற்று திறக்க சென்றபோது, கோவிலின் சிமென்ட் ஓடுகள் உடைக்கப்பட்டு, கோவில் உள்ளே இருந்த உண்டியல், பித்தளை பொருட்கள் திருடப்பட்டிருந்தன. புகாரின்படி, சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஜி.ஹெச்.,சில் மொபைல் திருட்டு

சென்ட்ரல்: கடலுாரைச் சேர்ந்த ரவிகுமார், 35, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். படுக்கையில் வைத்திருந்த அவரது மொபைல் போன் திருடு போனது. விசாரித்த மருத்துவமனை போலீசார், அதை திருடிய, வேலுாரைச் சேர்ந்த வினோத்குமார், 35, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன், 52, ஆகியோரை கைது செய்தனர்.

ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில், நேற்று முன்தினம் இரவு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது.

முன்பதிவு இல்லாத பெட்டியில் கிடந்த பையில், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ கஞ்சா இருந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர் அதை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்ற 6 பேர் சிக்கினர்

ஓட்டேரி: ஓட்டேரி, ஸ்டீபன்ஸ் ரோடு சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த கோயம்பேடு ரூபன், 19, வியாசர்பாடி தேவி என்ற செல்வி, 38, ஆகிய இருவரையும், ஓட்டேரி போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் தகவலின்படி, வியாசர்பாடி ராகுல் என்ற சுபாஷ், 23, என்பவரும் கைது செய்யப்பட்டார்.

அதேபோல், மாதவரம் பஜார் பகுதியில் கஞ்சா விற்ற வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான 'அறுப்பு' குணா, 25, கரண், 21, மற்றும் கிஷோர், 23, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

3 கிலோ மின் ஒயர் திருடியவர் கைது

வானகரம்: வானகரம், ஆறாவது குறுக்கு தெருவைச் சேர்ந்த முத்துபெருமாள், 47, வீட்டின் மேல்தளத்தில் கட்டுமான பணி செய்து வருகிறார்.

கடந்த 12ல் பணியிடத்தில் மெயின் சுவிட்ச் பாக்ஸை உடைத்து 3 கிலோ மின்சார ஒயர்களை திருடிய, மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஷ்யாம்குமார், 22, என்பவரை, வானகரம் போலீசார் நேற்று கைது செய்தனர். 1 கிலோ மின்சார ஒயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காப்பர் ஒயர் திருடிய இருவர் கைது

ஆலந்துார்: பரங்கிமலை, பட்ரோடு பகுதியில் மெட்ரோ திட்டப் பணி தளத்தில், காப்பர் ஒயர்கள் திருடு போனது. அவற்றை திருடிய பரங்கிமலை, கிழக்கு செட்டித் தெருவைச் சேர்ந்த கோடீஸ்வரன், 32, தண்டுமாநகரைச் சேர்ந்த ஹரீஸ், 26, ஆகியோரை, பரங்கிமலை போலீசார் கைது செய்தனர்.

பெண் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்

சென்னை: சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஐ.டி., ஊழியர் ஆனந்த். அவரது மனைவி அமலசோபியா, 31. குழந்தையின்மைக்காக, மந்தைவெளி பகுதியில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தில், நேற்று காலை அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

சிறிது நேரத்தில், அமல சோபியா இறந்து விட்டதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்று, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கூடிய, அமலசோபியாவின் உறவினர்கள், 'தவறான சிகிச்சையால் தான் அவர் உயிரிழந்தார். தனியார் மருத்துவமனை நிர்வாகம், டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கூறி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, உறவினர்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us