UPDATED : ஜூன் 03, 2026 05:44 PM
ADDED : ஜூன் 03, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
சிந்தாதிரிப்பேட்டை: சிந்தாதிரிப்பேட்டை, ராஜகோபாலன் தெருவில், நேற்று முன்தினம் இரவு, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், அங்கு சுற்றி திரிந்த, கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேந்தர்குமார், 33, என்பவரை பிடித்தனர். அவரது கைப்பையில் குட்கா புகையிலைப் பொருட்கள் இருந்தன.
அவர் தந்த தகவலின்படி, சவுகார்பேட்டையில் ஒரு கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 96.7 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்ததுடன், சுரேந்தர்குமாரை கைது செய்தனர்.
