தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஏரி நீரில் மூழ்கி முதியவர் பலி

ஏரி நீரில் மூழ்கி முதியவர் பலி

ஏரி நீரில் மூழ்கி முதியவர் பலி


UPDATED : ஜூன் 23, 2026 09:55 PM

ADDED : ஜூன் 23, 2026 07:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2026 09:55 PM ADDED : ஜூன் 23, 2026 07:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசன்கழனி: சித்தாலப்பாக்கம், கன்னி கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாசிலாமணி, 70; தனியார் நிறுவன காவலாளி. நேற்று மதியம், அரசன்கழனி கிராமத்தில் உள்ள ஏரி நீரில் மூழ்கி, இறந்து நிலையில் மிதந்தார்.

தகவலறிந்த பெரும்பாக்கம் போலீசார், அவரது உடலை மீட்டனர்; பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

கால்வாயில் விழுந்த முதியவர் மீட்பு

மதுரவாயல்: மதுரவாயல் அருகே, அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்த நந்தன், 60, அம்பேத்கர் நகரில் கூவம் ஆறுடன் இணையும் கால்வாயின் அருகே, நேற்று அமர்ந்திருந்தார்.

மது போதையில் இருந்த அவர் 15 அடி ஆழ கால்வாயில் தவறி விழுந்தார். தீயணைப்பு நிலைய வீரர்கள், ஏணி மூலம் நந்தனை மீட்டனர். காலில் எலும்பு முறிவு, கைமுட்டி மற்றும் தலையில் ஏற்பட்ட காயங்களுக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

443 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: சென்னையில் 122 தற்காலிகமாக வாகன சோதனை சாவடிகளை அமைத்து, 19 முதல் 21ம் தேதி வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக, 443 வழக்குகளை பதிவு செய்தனர்.

அதேபோல், போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் கடந்த ஏழு நாட்களில் 38 வழக்குகள் பதிவு செய்து, 77 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

அரசு ஊழியருக்கு வெட்டு

கொடுங்கையூர்: கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் அன்பு, 42; தலைமை செயலகத்தில் உள்ள சமூக நலத்துறையில் வாகன ஓட்டுநர்.

முத்தமிழ் நகரில் உள்ள பூங்கா அருகே, நேற்று மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, இரண்டு பைக்குகளில் வந்த ஐந்து பேர், கத்தியால் அன்பு தலையில் வெட்டி தப்பினர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் எஸ்.பி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 42; சி.பி.சி.எல்., நிறுவனத்தில் ஒப்பந்த மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 18ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே, 19ம் தேதி அதிகாலை, கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, நிஜாமுதீன் துரந்தோ விரைவு ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். கணவர் மாயமானதாக கடந்த 19ல் அவரது மனைவி அளித்த புகாரை விசாரித்தபோது, அவர் ரயிலில் அடிபட்டு இறந்தது நேற்று தெரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us