ADDED : ஜூலை 04, 2026 02:51 AM

தி ருவொற்றியூரைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் செல்வம், 44, நேற்று முன்தினம் இரவு, அண்ணாமலை நகர் ரயில்வே கேட் தண்டவாளத்தை கடக்கும்போது, ஆந்திரா நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு இறந்தார்.
அ ம்பத்துாரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமரவேல், 61, நேற்று முன்தினம் இரவு, அம்பத்துார் ரயில் நிலையத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள வந்தபோது, கோயம்புத்துார் நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
ப ட்டினம்பாக்கம் முகத்துவாரத்தில், நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியது. பட்டினம்பாக்கம் போலீசார், சடலத்தை மீட்டு, இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வி யாசர்பாடியைச் சேர்ந்த ஞானபிரகாசம், 70, அதே பகுதியில் வசிக்கும் வேலுசாமி என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கடனாக வாங்கி, திருப்பி தராமல் ஏமாற்றினார். ஞானபிரகாசத்தை, எம்.கே.பி.நகர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
பீ ஹாரைச் சேர்ந்த அம்ரீத்குமார் தாகூர், 26, சென்ட்ரல் ரயில் நிலைய நடைபாதையில் நேற்று முன்தினம் துாங்கிய போது, அவரிடம் இருந்த இரு மொபைல் போன்கள் திருடப்பட்டன. திருப்பூரைச் சேர்ந்த பிரதீப், 31, என்பவரை, போலீசார் கைது செய்து, ஐந்து போன்களை பறிமுதல் செய்தனர்.
சி வகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், 20, கார்த்திகேயன், 24, ஆகியோர், திருவல்லிக்கேணி பகுதியில் குட்கா விற்றதை அறிந்து, போலீசார் அவர்களை கைது செய்தனர்; 150 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
