தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/தலைமறைவு குற்றவாளிகள் சிக்கனர்

தலைமறைவு குற்றவாளிகள் சிக்கனர்

தலைமறைவு குற்றவாளிகள் சிக்கனர்


UPDATED : ஜூலை 06, 2026 07:58 PM

ADDED : ஜூலை 06, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 07:58 PM ADDED : ஜூலை 06, 2026 07:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: புளியந்தோப்பு டோபிகானா பகுதியைச் சேர்ந்த கரண், 21 என்பவரை, கடந்த ஏப்., 23ம் தேதி, ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த வழக்கில் புளியந்தோப்பு, சிவராஜபுரத்தைச் சேர்ந்த 'கடல்' ராகுல், 21 என்ற நபர் ஜாமின் பெற்றார். ஆனால் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போடாத காரணத்தால், நிபந்தனை ஜாமின் ரத்து செய்யப்பட்டு, நேற்று காலை ராகுலை புளியந்தோப்பு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

* பெரம்பூர் ரமணா நகரைச் சேர்ந்தவர் ‛எலி' சுரேஷ், 47. இவர் பேசின்பாலம் காவல் நிலையத்தில் பதிவான குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த காரணத்தால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பேசின்பாலம் போலீசார் நேற்று காலை சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கத்தியுடன் ரகளை செய்த ரவுடி கைது

புளியந்தோப்பு: புளியந்தோப்பு, முத்து நகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், போதையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட சாஸ்திரி நகரைச் சேர்ந்த எட்வின், 25 என்பவரை, புளியந்தோப்பு போலீசார் நேற்று முன்தினம் மடக்கி பிடித்தனர். விசாரணையில், இறந்து போன அவரது கூட்டாளியான ஸ்ரீதர் என்பவரின் வீட்டிற்கு சென்ற எட்வின், அவரது பெற்றோரை பார்த்து வரும்போது, பொது இடத்தில் மது அருந்தி, அவ்வழியாக சென்றோரிடம் வீண்தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

'மாஸ்க்' அணிந்து வந்து டூ - வீலர் திருட்டு

ஆவடி: அயப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் தங்கராஜ், 25; தனியார் நிறுவன ஊழியர்.

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது டி.வி.எஸ்., ஜூபிடர் ஸ்கூட்டர், நேற்று காலை திருடப்பட்டிருந்தது. வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது, நேற்று அதிகாலை 'மாஸ்க்' அணிந்து வந்த மர்ம நபர்கள், ஸ்கூட்டரை திருடி செல்வது பதிவாகி இருப்பது தெரிந்தது. அயப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

அதிகாலையில் மொபைல் போன் பறிப்பு

தாம்பரம்: வண்டலுார் அடுத்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 45. இவர், நேற்று முன்தினம் இரவு, சென்னையில் படம் பார்த்து விட்டு, அதிகாலையில் பைக்கில் வீடு திரும்பினார். இரும்புலியூர் அருகே பைக்கை நிறுத்தி, மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு பைக்கில் வந்த 3 பேர், மணிகண்டனின் மொபைல் போனை பறித்து சென்றனர். தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்ற இருவருக்கு 'காப்பு'

புழல்: புழல், பஜனை கோவில் தெருவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா, 25, மேகநாதன், 25 ஆகியோரை, புழல் போலீசார் கைது செய்து, 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

கூலித்தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

எண்ணுார்: எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் சரண், 37; கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி. சரணின் மதுப்பழக்கத்தால், தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, வீட்டில் தனியாக இருந்த சரண், மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தகவலறிந்து வந்த எண்ணுார் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us