UPDATED : ஜூலை 08, 2026 05:41 PM
ADDED : ஜூலை 08, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
எழும்பூர்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலாஜி, 33, எழும்பூர் தமிழ்ச்சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த 6ல் கடையை மூடி, தமிழ்ச்சாலையில் நடந்து சென்றார்.
அவரிடம் கத்தியை காட்டி 1,500 ரூபாய் பறித்த மூவர் மீது, எழும்பூர் போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் உள்ளகரம் பகுதியைச் சேர்ந்த விக்கி, 24, என்பவரை நேற்று கைது செய்தனர்; மற்ற இருவரை தேடுகின்றனர். விக்கி மீது 21 குற்ற வழக்குகள் உள்ளன.
