தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பிளேடால் உடலை அறுத்து வாலிபர் ரகளை

பிளேடால் உடலை அறுத்து வாலிபர் ரகளை

பிளேடால் உடலை அறுத்து வாலிபர் ரகளை


UPDATED : ஜூலை 08, 2026 11:09 PM

ADDED : ஜூலை 08, 2026 09:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2026 11:09 PM ADDED : ஜூலை 08, 2026 09:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா சாலை: ஆயிரம் விளக்கு பகுதியில், முன்னால் சென்ற கார் மீது '18இ' மாநகர பேருந்து மோதியது. இரு ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்பகுதியில் மது போதையில் இருந்த வாலிபர், பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்தார். அங்கு வந்த போக்குவரத்து போலீஸ்காரர், போதை வாலிபரை விரட்டினார். அப்போது அவர், அங்குள்ள ஒரு கடையில் பிளேடு வாங்கி, தன் உடலில் அறுத்துக்கொண்டார். அவரது சகோதரர் வந்து, அவரை அழைத்து சென்றார்.

**

மனைவியின் மண்டையை உடைத்த கணவன் கைது

பம்மல் : பல்லாவர ம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் மனோஜ்குமார், 33 , சொந்த ஊரான கோவைக்கு செல்ல மனைவி ஜெயந்தியை, 23, அழைத்துள்ளார். அவர் மறுக்கவே, தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மனோஜ்குமார் வீட்டில் இருந்த சுத்திய லால் மனைவியின் தலையில் தாக்கினார்.

பலத்த காயமடைந்த ஜெயந்தி யை , அக்கம் பக்கத்தினர் மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சங்கர் நகர் போலீசார், மனோஜ்குமாரை கைது செய்த னர்.

**

கஞ்சா விற்ற பீஹார் வாலிபர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூர், பாலகிருஷ்ணா நகர் பூங்கா அருகே கஞ்சா விற்றுவந்த பீஹாரைச் சேர்ந்த சத்தியம் குமார், 20, என்பவரை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 80,000 ரூபாய் மதிப்புள்ள 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us