தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 7 நாளில் குட்கா வியாபாரிகள் 105 பேர் கைது

7 நாளில் குட்கா வியாபாரிகள் 105 பேர் கைது

7 நாளில் குட்கா வியாபாரிகள் 105 பேர் கைது


UPDATED : ஜூலை 14, 2026 04:22 PM

ADDED : ஜூலை 14, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2026 04:22 PM ADDED : ஜூலை 14, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிராக, சென்னை போலீசார் சிறப்பு சோதனை செய்தனர். ஏழு நாட்களில், 102 வழக்குகள் பதிந்து, 105 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 435 கிலோ புகையிலைப் பொருட்கள், 3 பைக்குகள், 2 ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. குட்கா விற்பனையில் ஈடுபடுவோரின் வங்கி கணக்கை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பானிபூரி கடைக்காரரை தாக்கியோர் கைது

வேப்பேரி: கொசப்பேட்டை, மூக்குத்தெருவில் பானி பூரி கடை நடத்தி வருபவர் சோபன்யாதவ், 28. இவர், 12ம் தேதி இரவு கடைக்கு வந்து சாப்பிட்ட இருவரிடம் பணம் கேட்டார். ஆத்திரமடைந்த இருவரும் அவரை தாக்கிவிட்டு தப்பினர். வேப்பேரி போலீசார் வழக்கு பதிந்து, தாக்குதல் நடத்திய, சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த, நாகராஜ், 42, சூளையை சேர்ந்த சேதுராமன், 28 ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் மீது 13 குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் கூறினர்.

'அம்மா' உணவகத்தில் முதியவர் திடீர் பலி

போரூர்: போரூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 'அம்மா' உணவகம் இயங்கி வருகிறது. இங்கு, நேற்று முன்தினம் இரவு உணவு வாங்கிக் கொண்டிருந்தபோது, 63 வயது முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். போரூர் போலீசாரின் விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான சதானந்தம், 63, என்பதும், சென்னை, முகலிவாக்கம் காமாட்சி நகரில் தங்கி பணி புரிந்ததும் தெரிய வந்தது.

கார் ஓட்டுநரை தாக்கிய போதை நபருக்கு வலை

பம்மல்: திருநீர்மலை, இரட்டை மலை சீனிவாசன் தெருவைச் சேர்ந்தவர் ஜூவகன், 36; கார் ஓட்டுநர். நேற்று முன்தினம் இரவு, இவரது உறவினருடன், அதே பகுதியைச் சேர்ந்த தீபக், 28 என்பவர், போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை ஜூவகன் தட்டி கேட்டபோது, ஆத்திரமடைந்த தீபக் பீர் பாட்டிலால் ஜூவகனை தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த ஜூவகனை அங்கிருந்தவர்கள் மீட்டு, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us