தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு

தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு

தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு


UPDATED : ஆக 08, 2026 06:15 PM

ADDED : ஆக 08, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2026 06:15 PM ADDED : ஆக 08, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவொற்றியூர்: திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் குமார், 67. இவர், தான் பெற்ற ஐந்து பிள்ளைகள் தன்னை சரியாக கவனித்து கொள்ளவில்லை எனக்கூறி, திருவொற்றியூர் காவல் நிலைய வளாகத்தில் நேற்று முன்தினம், உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமார், சிகிச்சை பலனின்றி, நேற்று மதியம் உயிரிழந்தார். திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

1 டன் ரேஷன் அரிசி பறிமுல்

கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், கத்திவாக்கம், விம்கோ நகர், மீஞ்சூர் ஆகிய ரயில் நிலையங்களில், பயணியர் அமரும் இருக்கைகளின் கீழ், ஆந்திராவுக்கு கடத்தவிருந்த 30 மூட்டைகளில், 850 கிலோ ரேஷன் அரிசியை, ரயில்வே போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.

இதில் தொடர்புடைய எளாவூரைச் சேர்ந்த நீலவேணி, 80, செங்கம்மா, 75, புஜ்ஜியம்மா, 65, லட்சுமி, 35, ஆகியோரை பிடித்தனர். வண்ணாரப்பேட்டையில் 150 கிலோ ரேஷன் அரிசி மட்டும் சிக்கியது.

பிடிபட்ட 1 டன் ரேஷன் அரிசி மற்றும் நால்வரை, பட்டரவாக்கம் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

-

பெரியப்பாவை தாக்கிய மகன் கைது

தரமணி: பெருங்குடி, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணா, 54. இவரது அண்ணன் மருமகன் நாகேந்திர ராஜு, 32. இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

நேற்று முன்தினம், தரமணியில் உள்ள ஒரு 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் இருவரும் மது குடித்தனர். அப்போது நடந்த தகராறில், ஆத்திரமடைந்த நாகேந்திர ராஜு, பீர் பாட்டிலால் கிருஷ்ணா தலையில் தாக்கினார். பலத்த காயமடைந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தரமணி போலீசார், நாகேந்திர ராஜுவை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us