தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மது பழக்கத்தால் தொழிலாளி பலி

மது பழக்கத்தால் தொழிலாளி பலி

மது பழக்கத்தால் தொழிலாளி பலி


UPDATED : ஆக 10, 2026 04:58 PM

ADDED : ஆக 10, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2026 04:58 PM ADDED : ஆக 10, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புளியந்தோப்பு, குமாரசாமி ராஜபுரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன், 45; சுமை துாக்கும் தொழிலாளி மற்றும் ரவுடி. மது போதைக்கு அடிமையான இவருக்கு, கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், இரு மாதங்களுக்கு முன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் அறிவழகன், மீண்டும் மது குடித்து வந்ததால், கணைய பாதிப்பு அதிகரித்து, சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, கடும் வயிற்று வலியால் துடித்த அறிவழகனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு, அவரது மனைவி சுமித்ரா, 40, அழைத்துச் சென்றார். அங்கு, டாக்டர் பரிசோதனையில் அறிவழகன் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. பேசின்பாலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us