ADDED : ஆக 19, 2026 12:41 AM

பஸ்சில் பெண்ணிடம் அத்துமீறியவர் கைது
கொளத்துார்: செங்குன்றத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், வேலை முடிந்து நேற்று முன்தினம் மாலை கோயம்பேடில் இருந்து செங்குன்றம் செல்லும் தடம் எண்: 114 பேருந்தில் பயணித்த போது, திருவொற்றியூரைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன், 38, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சுதாரித்த அப்பெண், சக பயணியர் உதவியுடன், அந்நபரை ராஜமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
தகராறை விலக்க சென்றவர் மீது தாக்குதல்
திருவல்லிக்கேணி: பல்லவன் சாலை, காந்தி நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார், 35; பெயின்டர். கடந்த 15ம் தேதி வீட்டருகே நடந்து சென்றார். அப்போது, ஒருவருடன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட தமிழ்மணியை விலக்கிவிட்டுள்ளார். ஆத்திரமடைந்த தமிழ்மணி, தன் சகோதரர்களான ராகுல் கிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து வினோத்குமாரை தாக்கினார். படுகாயமடைந்தவர், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்படி, திருவல்லிக்கேணி போலீசார், ராகுல் கிருஷ்ணன், 21, கோகுலகிருஷ்ணன், 19, ஆகியோரை கைது செய்து, தமிழ்மணியை தேடி வருகின்றனர்.
