UPDATED : ஆக 20, 2026 09:30 PM
ADDED : ஆக 20, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
காசிமேடு: காசிமேடு, ஜீவரத்தினம் நகரைச் சேர்ந்தவர் கவுதம், 26; மீனவர்.
இவர், நேற்று முன்தினம் நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள கோவில் அருகே, மது அருந்தி கொண்டிருந்தார். அங்கு மதுபோதையில் வந்த தானேஷ் என்பவர் கவுதமை, தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தானேஷ், கவுதம் மீன் பிடிக்க கடலுக்கு சென்றபோது, பின்னால் வந்து கத்தியால் பயங்கரமாக வெட்டி உள்ளார். கவுதம் சத்தம் போடவே, அங்கிருந்து தப்பினார். அவ்வழியாக வந்தவர்கள், அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். விசாரித்த காசிமேடு போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, தானேஷை நேற்று கைது செய்தனர்.
