UPDATED : ஆக 21, 2026 07:25 PM
ADDED : ஆக 21, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
ராயபுரம்: ராயபுரம், ஜி.எம்.பேட்டையில் நேற்று முன்தினம், ராயபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக, 'ஹோண்டா டியோʼ ஸ்கூட்டரில் வந்த வாலிபர்களை மடக்கி சோதனை செய்ததில், புகைப்பதற்காக வைத்திருந்த கஞ்சா சிக்கியது. விசாரணையில் 17 வயது சிறுவன் மற்றும் புதுவண்ணாரப்பேட்டை, சிவன் நகரைச் சேர்ந்த ஜெகன், 19, ஆகியோர் சிக்கினர். 1 கிலோ கஞ்சா, 36 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜெகனை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், சிறுவனை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
