தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்//

கிரைம் கார்னர்//

கிரைம் கார்னர்//


ADDED : ஆக 25, 2026 09:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 09:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போலீசுக்கு ‘டிமிக்கி’ கொடுத்தவர் கைது

ராயப்பேட்டை: ராயப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 2023ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கார்த்திக், 24 என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்தவர் தலைமறைவானார். கடந்த ஏப்., 15ம் தேதி, அவரை பிடித்து ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. போலீசார் கார்த்திக்கை தேடி வந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டார்.

தாயை தாக்கிய மகன் கைது

மதுரவாயல்: மதுரவாயல், சோழன் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கன்னியம்மாள், 70; பழ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 23-ம் தேதி இரவு, இவரது மருமகள் வீட்டுக்கு வெளியே அமர்ந்து பக்கத்து வீட்டு பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த கன்னியம்மாள் மருமகளை கண்டித்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த கன்னியம்மாளின் மகன் கார்த்திக், 31, தன் தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.

காயமடைந்த கன்னியம்மாள் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். கார்த்திக்கை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது, 2 குற்ற வழக்குகள் உள்ளன.

போதை வாலிபர்கள் ரகளை

கொளத்துார்: கொளத்துார், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிபாண்டி, 46. வீட்டின் முன் மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் மது போதையில் இவரது கடைக்கு வந்த இருவர், பணம் கொடுக்காமல் மளிகை பொருள் கேட்டுள்ளனர். மாரிபாண்டி தர மறுக்கவே, இருவரும் மாரிபாண்டியை ஆபாசமாக திட்டிச் சென்றனர்.

மாரிபாண்டி கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில், மீண்டும் வந்த போதை வாலிபர்கள் கடை மற்றும் மாரிபாண்டி வீட்டின் மீது கற்களை எரிந்தனர். மேலும் கடை அருகே இருந்த இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தி சென்றனர்.

இச்சம்பவம் குறித்து மாரிபாண்டி ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து போதை வாலிபர்களை தேடி வருகின்றனர்.

மது பதுக்கிய பெண் கைது

பெரம்பூர்: கள்ளச்சந்தையில் விற்க மது வகைகளை பதுக்கிய பெண் கைது செய்யப்பட்டார்.

பெரம்பூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயா, 44. இவர் மது வகைகளை பதுக்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வந்துள்ளார். நேற்று மாலை விஜயா டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி மாதவரம் நெடுஞ்சாலையில் பதுக்கி வைத்திருந்தார். தகவல் அறிந்த செம்பியம் போலீசார் விஜயாவை கைது செய்து, அவரிடமிருந்து, 180 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் விற்ற 5 பேர் கைது

சென்னை: கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், கஞ்சா மற்றும் வலி நிவாரண மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட செல்வ விநாயகர் நகர் பகுதியை சேர்ந்த கேசவ பிரியன், 23, ரூபீஸ் பாபு, 25, ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம், 10 மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புளியந்தோப்பில் வலி நிவாரண மாத்திரைகள் விற்றதாக, கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த மேத்யூ, 19, பூபாலன், 28, ஆகிய இருவரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி மணிமாறன், 24, என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

வியாசர்பாடி குட்செட் பகுதியில் 300 கிராம் கஞ்சாவுடன் ராம்குமார், 35, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெண்ணை திட்டிய ரவுடி கைது

புளியந்தோப்பு: புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்த அம்மு, 24, கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கே.சி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். சமீபத்தில், 10வது மாடியில் இருந்து ஒன்பதாவது மாடிக்கு குடிபெயர்ந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 29, மது போதையில் அம்முவிடம் தகராறு செய்து, ஆபாசமாக திட்டி உள்ளார். இதையடுத்து பேசின்பாலம் போலீசார், சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜேஷை ––எப்போது–– கைது செய்தனர்.

இளம்பெண் தற்கொலை

விருகம்பாக்கம்: சாலிகிராமம், மதியழகன் நகர், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ரவீந்திரன், 30, தனியார் நிறுவனத்தில் விற்பனை மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ருசிதா, 27. இருதினங்களுக்கு முன், ருசிதாவின் மொபைல் போனுக்கு மர்ம நபர்கள் இரு வெவ்வேறு எண்களில் இருந்து தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது, ‘உங்களுடைய வீடியோ எங்களிடம் உள்ளது’ அதை உங்கள் கணவருக்கு அனுப்பி விடுவோம்’ என மிரட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து ருசிதா தன் கணவரிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் காலை ரவீந்திரன் வேலைக்கு சென்றுள்ளார். இரவு மனைவியின் போனுக்கு தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை எடுக்க வில்லை. இதனால் ரவீந்திரன் வீட்டு உரிமையாளர் ராஜேஷூக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் சென்று கதவைத் தட்டியுள்ளார்.

கதவு திறக்கப்படாததால், ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்த போது, படுக்கையறையில் ருசிதா துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலின்படி விருகம்பாக்கம் போலீசார் வந்து ருசிதாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம நபர்களை குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us