UPDATED : செப் 02, 2026 03:55 PM
ADDED : செப் 02, 2026 03:53 PM
அ நிறம் | அளவு
தாம்பரம்: தாம்பரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ், 20. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து, 'கூரியர்' மூலம், 1,000 போதை மாத்திரைகள் வாங்கியபோது, போலீசாரிடம் சிக்கினார்.
அவரது தகவலின்படி, மும்பை அக்ரிபடா பகுதியில், மருந்து கடை நடத்தி வந்த விஜய் ஜாதவ், 48, விற்பனை பிரதிநிதி பங்கஜ்குமார், 34, ஆகியோர் கைது செய்யபட்டனர். இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த முகமது இக்தியாஸ், 20, என்பவரை, தாம்பரம் போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.
