ADDED : செப் 04, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
முதியவர் சடலம் மீட்பு
மேடவாக்கம்: மேடவாக்கம்- – பரங்கிமலை பிரதான சாலை, வெள்ளைக்கல் பேருந்து நிறுத்தம் எதிரில், ஒரு கடையின் வாசலில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். மேடவாக்கம் போலீசார் நேற்று, சடலத்தை கைப்பற்றி, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கடந்த இரு நாட்களாக, கடை வாசலில் இரவில் தங்கி வசித்து வந்ததாக, கடை உரிமையாளர் தெரிவித்தார். மேற்கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
