தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கால்பந்து வீரரை கத்தியால் குத்திய ரவுடி கைது

கால்பந்து வீரரை கத்தியால் குத்திய ரவுடி கைது

கால்பந்து வீரரை கத்தியால் குத்திய ரவுடி கைது


UPDATED : செப் 07, 2026 10:39 PM

ADDED : செப் 07, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2026 10:39 PM ADDED : செப் 07, 2026 01:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் அஜித், 22; கால்பந்து வீரர். இவரது நண்பர் சந்தோஷ்குமார், 26. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் அஜித் நடந்து சென்றபோது, முன்விரோதம் காரணமாக, கத்தியால் தலையில் குத்தி சந்தோஷ்குமார் தப்பிச் சென்றார். அங்கிருந்தோர் அஜித்தை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்படி, புளியந்தோப்பு போலீசார், ரவுடியான சந்தோஷ்குமாரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர் .

போதை மாத்திரைகள் பறிமுதல்

மாங்காடு: மாங்காடு அருகே கோவூர் தைலந்தோப்பு பகுதியில், மாங்காடு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அங்கு சுற்றித்திரிந்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கவுதம், 24, மாங்காடு பகுதியைச் சேர்ந்த மனோகரன், 21, ஆகியோர், போதை மாத்திரை வைத்திருந்தது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 500 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

உதவி செய்வதாக நடித்து கைவரிசை

புளியந்தோப்பு: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சர்தாநத், 19, தமிழகம் -- ஆந்திரா எல்லையில் உள்ள தனியார் உணவு பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று, பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தவர், அங்கிருந்த நபர்களிடம் உதவி கேட்டுள்ளார். அங்கிருந்த இருவர், உதவி செய்வதாக கூறி, அவரது பையை பறித்து சென்றனர். புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்களை தாக்கிய மூவர் கைது

புளியந்தோப்பு: புளியந்தோப்பைச் சேர்ந்த 23 வயது பெண், நேற்று முன்தினம், கே.எம்.கார்டன் 11வது தெருவில் நடந்து சென்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த விஜய், 22, விக்னேஷ், 26, சதீஷ், 30, ஆகியோர் கிண்டல் செய்துள்ளனர். இதை கண்டித்த அப்பெண்ணையும், தடுக்க வந்த மற்றொரு பெண்ணையும் அவர்கள் தாக்கியுள்ளனர். புளியந்தோப்பு போலீசார், மூவரையும் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

மூதாட்டி தற்கொலை முயற்சி

எம்.கே.பி., நகர்: பெரம்பூர், கக்கன்ஜி காலனி, அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்வரி, 70. இவர், தற்கொலை செய்ய முடிவெடுத்து, சர்மா நகர் அருகே உள்ள, பாரதி நகரில் செல்லும் கால்வாயில் நேற்று குதித்தார்.

தகவலறிந்து வந்த எம்.கே.பி., நகர் போலீசார், வியாசர்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள், மூதாட்டி ராஜலட்சுமியை மீட்டனர். காலில் காயமடைந்த மூதாட்டி ராஜலட்சுமியை, அவரது உறவினர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய 4 பேர் கும்பல்

எம்.ஜி.ஆர்., நகர்: எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் குமரேசன், 40; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு எம்.ஜி.ஆர்., நகர் அண்ணா பிரதான சாலையோரம் ஆட்டோவை நிறுத்தியுள்ளார். அப்போது, காரில் வந்த நான்கு பேர் கும்பல், குமரேசனை தாக்கி விட்டு தப்பியது. காயமடைந்த குமரேசன், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us